Monday, 25 September 2017

விஷக் காய்ச்சல் விலக


கிரந்தீ மங்கேப்ய: கிரணநிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகரசிலாமூர்த்தி மிவ ய:
ஸ: ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா: ஸுகயதி ஸுதாதார ஸிரயா ஆதி சங்கரரின் ஸெளந்தர்யலஹரி 

பொதுப் பொருள்: அம்பிகையே நமஸ்காரம்.

என் ஐம்புலன்களாலும் பக்தி ரசத்தைப் பெருக்கும் வகையில் உன்னை வணங்குகிறேன். சந்திரகாந்தச் சிலை வடிவினளாக உன்னை உருவகித்து தியானிக்கிறேன். எனக்கு, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை அடக்கும் கருடன் போன்ற ஆற்றலினை அருள்வாயாக. அம்மா, உன் பார்வை, விஷ ஜந்துகளால் ஏற்படும் உபாதைகளையும், விஷக் காய்ச்சலையும் அறவே ஒழிக்கிறது. பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம் தன்னைத் தாக்கக்கூடாது என்பதற்காக மஹாவிஷ்ணுவே அம்ருதேஸ்வரியான அம்பிகையை தியானித்திருக்கிறார் என்றால், உன் அருள்தான் எத்தகைய நன்மை விளைவிக்கக் கூடியது! 

(இந்தத் துதியை பஞ்சமி திதிநாள் அன்று நோயுற்றோர், விஷ உபாதையால் அவதியுறுவோர் முன் 16 முறை ஜபித்து அவர்களுக்கு விபூதி இட்டு அம்பிகையை உளமாற வணங்கினால் பாதிப்புகள் விலகும்)

No comments:

Post a Comment