Friday, 2 February 2018

பலன் தரும் சிவ மந்திரங்களும் - பலன்களும்

பலன் தரும் சிவ மந்திரங்களும் - பலன்களும்

கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவ மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க - சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும். 
ஓம் ஸ்ரீயும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

சூரிய வழிபாடு - ஸ்லோகம் சொல்லும் முறை

Related image

முதலில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். மஞ்சளில் விநாயகரைப் பிடித்து அதன் மேல் அருகம்புல்லை வைத்து, கைகளில் வாசனை மலர்களை எடுத்துக் கொண்டு,

‘’ஓம் ஹஸ் கராடாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ கணேச: ப்ரசோதயாத்’’ என்றும்

‘’நல்லார் பழிப் பினெழிற் செம்பவளத்தை நாணநின்ற
பொல்லா முகத் தெங்கள் போதகமே புறமூன்றெரித்த
வில்லா னளித்த விநாயகனே யென்று மெய்ம்மகிழ
வல்லார் மனத் தன்றி மாட்டாளிருக்க மலர்த்திருவே
ஓம் விநாயகா போற்றி’’

என்று சொல்லி மலர்களை சமர்ப்பித்து வெற்றிலை - பாக்கு, பழம் படைத்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும்.

அடுத்து, சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜைக்குத் தேவையான தேங்காய், ஐந்து விதமான பழங்கள், வெண்பொங்கல், பதினாறு உளுந்து வடை, பாயசம், தூபம், நெய்தீபம், வெண்தாமரை, முல்லை, நந்தியாவட்டை, சிவப்பு தாமரை ஆகியவற்றை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, வெள்ளை நூல் சுற்றிய சிறுகுடம் ஒன்றை கலசமாக அலங்கரித்துக் கொள்ள வேண்டும். சுத்தமான தரையில் சூரிய கோலத்தைப் போட்டு அதன்மேல் கோதுமை பரப்பி அதன் மேல் கலசத்தை வைக்க வேண்டும். ஏலக்காய், பச்சை கற்பூரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, வெட்டிவேர் ஆகியவற்றை இடித்து கலச நீரில் போட வேண்டும்.

இப்போது, உடல்நலம் தேவைப்படுபவரை மணை ஒன்றில் கோலம் போட்டு, பூஜை செய்யுமிடத்தில் கிழக்குப் பக்கத்தைப் பார்த்தவாறு உட்கார வைக்க வேண்டும். பிறகு பூஜையைத் தொடங்கலாம்.

அன்றைய திதி, வாரம், நட்சத்திரம் சொல்லி,

‘’ஓம் நம: சூர்யமண்டலாதிபதியே.. மம சுக குடும்ப சர்வ வியாதி நிவாரணார்த்தம் மன வாக் சுத்த சித்யர்த்தம் சூர்ய பூஜாம் கரிஷ்யே’’ என்று சொல்லி, கலசத்துக்கு ஐந்து உபசாரங்களை செய்ய வேண்டும். அப்போது கலசத்தின் மேல் சிறிது தீர்த்தம் விட வேண்டும். பிறகு,

‘மி’’’ஓம் சூர்யாய நம: ஸ்நானம் சமர்ப்பயாமி.
ஓம் அருணாய நம: ஸ்நானானந்தரம் ஆசமனம் சமர்ப்பயாமி.
ஓம் தினகராய நம: கந்தம் புஷ்பம் சமர்ப்பயாமி.
ஓம் பாஸ்கராய நம: வஸ்திரம் உபவீதம்
ஓம் அர்க்காய நம: புஷ்ப மாலாம் சமர்ப்பயா

என்று சொல்லி முடித்ததும் கீழே இருக்கிற முக்கியமான சூரிய தியானத்தைக் கை கூப்பியபடி சொல்ல வேண்டும்.

‘’சூர்யம் குங்கும ஸங்காசம் ஸர்வாபரண பூஷிதம்
துவினேத்ரம் சாருவதனம் ரக்த மால்யா நுலேபனம்
சதுர்புஜ சமோபேதம் பரிதச்சாம்புஜ த்வயம்
அபீதி வரதோ பேதம் ப்ரபா மண்டல மண்டிதம்
உபவீத ஸமாயுக்தம் உஷாப்ரத்யுஷ ஸேவிதம்‘’

- இதை சொல்லி முடித்ததும் சூரியனைக் குறித்த பதினாறு தமிழ்ப் போற்றிகளைச் சொல்லி கலசத்தில் வெள்ளை நிற மலர்களைப் போட வேண்டும்.

‘’ஓம் ஆதவனே போற்றி
ஓம் உடல்நலம் தருவாய் போற்றி
ஓம் உள்வினை நீக்குவாய் போற்றி
ஓம் மும்மூர்த்தியே போற்றி
ஓம் மூத்தவனே போற்றி
ஓம் மூலப்பொருளே போற்றி
ஓம் ஒளிபொருந்தியவா போற்றி
ஓம் தெளிவுடையோய் போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் வட்ட ஒளியோனே போற்றி
ஓம் வரந்தரும் வள்ளலே போற்றி
ஓம் அழகு முகத்தோனே போற்றி
ஓம் அதிசயப்பொருளே போற்றி
ஓம் ஆதாரநிலையே போற்றி
ஓம் இயற்கைச் சுடரே போற்றி
ஓம் எல்லையற்றவா போற்றி
ஓம் சுகம்தரும் சுந்தரனே போற்றி! போற்றி!’’

என்று சொல்லி தேங்காய் உடைத்து வைத்து ஊதுபத்தி, நெய்தீபம் காட்டி படைக்கும் பொருட்களை நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு கலசத்துக்குக் கற்பூர ஆரத்தி காட்டி,

‘’ஓம் பாஸ்கராய வித்மஹே மகத்யுதிகராய தீமகி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் - சூர்ய நாராயண மூர்த்தியே நம:
கற்பூர நிராஜனம் தர்சயாமி’’

என்ற மந்திரப் பாடலை சொல்ல வேண்டும். பாடலை பாடி முடித்ததும் ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக் கொள்ள-பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

செல்வ கடாட்சம் கிடைக்கச்செய்யும் லட்சுமி ஸ்தோத்திரம்

செல்வ கடாட்சம் கிடைக்கச்செய்யும் லட்சுமி ஸ்தோத்திரம்

தினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

தினமும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கீழ்க்காணும் லட்சுமி ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். மேலும், தங்களது சக்திக்கு உகந்தவாறு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால், ரோகங்கள், மனத் துயரங்கள், சஞ்சலங்கள் ஆகிய யாவையும் நீங்கி புது நம்பிக்கைப் பிறக்கும். தேவியின் திருவருளால் வீட்டில் செல்வகடாட்சம் உண்டாகும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
ஸங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
நமஸ்தே கருடாரூடே கோலாஸுரபயங்கரீ
ஸர்வபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வவரதே ஸர்வதுஷ்டபயங்கரீ
ஸர்வ து:க்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸித்திபுத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்த்ரமூர்த்தே ஸ்தாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஆத்யந்த்ரஹிதே தேவி ஆத்யஸக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக ஸம்பூதே மகா லக்ஷ்மி நமோஸ்துதே

கருத்து : மகாமாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் பூஜிக்கப்பட்டவளும் சங்கம், சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்தவளுமான மகாலட்சுமி தேவியே தங்களை வணங்குகிறோம்.

தடைகள் நீங்கி திருமணம் நலமாய் நடந்திட ஸ்லோகம்

தடைகள் நீங்கி திருமணம் நலமாய் நடந்திட ஸ்லோகம்

இத்துதியை வெள்ளிக்கிழமை அல்லது அஷ்டமி அன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகிச்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வஸமாகர்ஷய
கர்ஷய ஸ்வாஹா

- ஸ்வயம்வரா பார்வதி மூல மந்திரம் 

பொதுப் பொருள் : ஹ்ரீம் எனும் பீஜத்தில் உறைபவளே, யோகினியே, யோகேஸ்வரியே, சகல ஜீவன்களும் எனக்கு வசமாக அருள்புரிவாய் அம்மா.

இத்துதி, தேவி வழிபாட்டில் ஸ்வயம்வர கல்யாணி என்று போற்றப்படுகிறது. ருக்மிணி கிருஷ்ணனை இத்துதியை ஜபித்தே மணந்தாள். பார்வதியாக அவதரித்தபோது உமாதேவி இத்துதியை பராசக்தியைக் குறித்து துதித்தே ஈசனை மணந்தாள். 

இத்துதியை வெள்ளிக்கிழமைகளிலும் அஷ்டமி தினத்தன்றும் குறிப்பாக பங்குனி உத்திர தினத்தன்றும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருளால் தடைகள் நீங்கி, திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும்.

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

ஸ்ரீ மாரியம்மன் தியான ஸ்லோகம்

தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றிகள்

1. ஓம் அறிவுருவே போற்றி
2. ஓம் அழிவிலானே போற்றி
3. ஓம் அடைக்கலமே போற்றி
4. ஓம் அருளாளனே போற்றி
5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
6. ஓம் அடியாரன்பனே போற்றி
7. ஓம் அகத்துறைபவனே போற்றி
8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
9. ஓம் அற்புதனே போற்றி
10. ஓம் அபயகரத்தனே போற்றி

11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி
12ஓம் ஆன்மீகநாதனே போற்றி
13. ஓம் ஆச்சாரியனே போற்றி
14. ஓம் ஆசாரக்காவலே போற்றி
15. ஓம் ஆக்கியவனே போற்றி
16. ஓம் ஆதரிப்பவனே போற்றி
17. ஓம் ஆதி பகவனே போற்றி
18. ஓம் ஆதாரமே போற்றி
19. ஓம் ஆழ்நிலையானே போற்றி
20. ஓம் ஆனந்த உருவே போற்றி
21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி
23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி
25. ஓம் உய்யவழியே போற்றி
26. ஓம் ஊழிக்காப்பே போற்றி
27. ஓம் எந்தையே போற்றி
28. ஓம் எளியோர்க்காவலே போற்றி
29. ஓம் ஏகாந்தனே போற்றி
30. ஓம் ஏடேந்தியவனே போற்றி
31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

32. ஓம் ஓங்கார நாதமே போற்றி
33. ஓம் கயிலை நாதனே போற்றி
34. ஓம் கங்காதரனே போற்றி
35. ஓம் கலையரசே போற்றி
36. ஓம் கருணைக்கடலே போற்றி
37. ஓம் குணநிதியே போற்றி
38. ஓம் குருபரனே போற்றி
39. ஓம் சதாசிவனே போற்றி
40. ஓம் சச்சிதானந்தமே போற்றி
41. ஓம் சாந்தரூபனே போற்றி

42. ஓம் சாமப்பிரியனே போற்றி
43. ஓம் சித்தர் குருவே போற்றி
44. ஓம் சித்தியளிப்பவனே போற்றி
45. ஓம் சுயம்புவே போற்றி
46. ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
47. ஓம் ஞானமே போற்றி
48. ஓம் ஞானியே போற்றி
49. ஓம் ஞானநாயகனே போற்றி
50. ஓம் ஞானோபதேசியேபோற்றி
51. ஓம் தவசீலனே போற்றி

52. ஓம் தனிப்பொருளே போற்றி
53. ஓம் திருவுருவே போற்றி
54. ஓம் தியானேஸ்வரனே போற்றி
55. ஓம் தீரனே போற்றி
56. ஓம் தீதழிப்பவனே போற்றி
57. ஓம் துணையே போற்றி
58. ஓம் தூயவனே போற்றி
59. ஓம் தேவாதிதேவனே போற்றி
60. ஓம் தேவருமறியா சிவனே போற்றி
61. ஓம்நன்னெறிக்காவலே போற்றி

62. ஓம் நல்யாக இலக்கே போற்றி
63. ஓம் நாகப்புரியோனே போற்றி
64. ஓம் நான்மறைப்பொருளே போற்றி
65. ஓம் நிலமனே போற்றி
66. ஓம் நிறைந்தவனே போற்றி
67. ஓம் நிலவணியானே போற்றி
68. ஓம் நீறணிந்தவனே போற்றி
69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
70. ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
71. ஓம் பசுபதியே போற்றி

72. ஓம் பரப்பிரம்மனே போற்றி
73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி
75. ஓம் பேறளிப்பவனே போற்றி
76. ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
77. ஓம் பொன்னம்பலனே போற்றி
78. ஓம் போற்றப்படுவனே போற்றி
79. ஓம் மறைகடந்தவனே போற்றி
80. ஓம் மறையாப் பொருளே போற்றி
81. ஓம் மஹேசுவரனே போற்றி

82. ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
83. ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி
84. ஓம் மாமுனியே போற்றி
85. ஓம் மீட்பவனே போற்றி
86. ஓம் முன்னவனே போற்றி
87. ஓம் முடிவிலானே போற்றி
88. ஓம் முக்கண்ணனே போற்றி
89. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
90. ஓம் முனீஸ்வரனே போற்றி
91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி

92. ஓம் மூலப்பொருளே போற்றி
93. ஓம் மூர்த்தியே போற்றி
94. ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
95. ஓம் மோன சக்தியே போற்றி
96. ஓம் மௌன உபதேசியே போற்றி
97. ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
98. ஓம் யோக நாயகனே போற்றி
99. ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
100. ஓம் யம பயமழிப்பவனே போற்றி
101. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி

102. ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
103. ஓம் வித்தகனே போற்றி
104. ஓம் விரிசடையனே போற்றி
105. ஓம் வில்லவப்பிரியனே போற்றி
106. ஓம் வினையறுப்பவனே போற்றி
107. ஓம் விஸ்வரூபனே போற்றி
108. ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி

Monday, 8 January 2018

ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய முருகன் ஸ்லோகங்கள்

ஒவ்வொரு நாளும் சொல்ல வேண்டிய முருகன் ஸ்லோகங்கள்

ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள். கந்தவேள் கருணைனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.

உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன. ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருணையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை :

தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

திங்கட்கிழமை :

துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

செவ்வாய்க்கிழமை :

செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

புதன்கிழமை :

மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

வியாழக்கிழமை :

மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

வெள்ளிக்கிழமை :

அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

சனிக்கிழமை :

கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் காயத்ரி மந்திரம்

ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் காயத்ரி மந்திரம்

கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள், கண் திருஷ்டி, பிறர் பொருள்மீது மோகம் கொள்பவர்கள் நம்மிடம் வராமல் இருக்க ஸ்ரீ வராஹரை வழிபடுவது சிறந்தது.

ஸ்ரீ வராஹவதாரம் ஸ்ரீ மகாவிஷ்ணுவால் ஸ்ரீ பூமாதேவியை காக்க எடுக்கப்பட்டதாகும். முன்னொரு சமயம் ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் ஸ்ரீ பூமாதேவியை  அபஹரிக்க வந்ததால், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் தஞ்சம்புகுந்தாள் ஸ்ரீ பூமாதேவி. ஹிரண்யாக்ஷனை வதம் செய்து ஸ்ரீ பூமாதேவியை காத்தார். கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள், கண் திருஷ்டி மற்றும் பிறர் பொருள்மீது மோகம் கொள்பவர்கள் ஆகியோர்கள் நம்மிடம் வராமல் இருக்க ஸ்ரீ வராஹரை  வழிபடுவது சிறந்தது. வெல்லம், கோரைகிழங்கு ஆகியவை இவருக்கு பிரசாதம். ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் உடன் இருந்து ரக்ஷித்து வருகிறார்.

ஓம் தநுர்த்தராய வித்மஹே  
வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி  
தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்

கஷ்டம் போக்கும் ஆஞ்சநேயர் 108 போற்றிகள்

கஷ்டம் போக்கும் ஆஞ்சநேயர் 108 போற்றிகள்

கஷ்டம், துன்பம் போக்கும் ஆஞ்சநேயர் 108 போற்றியை தினமும் அல்லது சனிக்கிழமைகளில் சொல்லி வந்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.

ஓம் அனுமனே போற்றி
ஓம் அதுலனே போற்றி
ஓம் அநிலன் குமார போற்றி
ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி
ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி
ஓம் அஞ்சிலே ஒன்றை தாவினாய் போற்றி
ஓம் அஞ்சிலே ஒன்றை வைத்தாய் போற்றி
ஓம் அரியணை தாங்கிய அனுமனோ போற்றி
ஓம் அஞ்சனா கிரியில் உதித்தாய் போற்றி
ஓம் அரக்கர் படையினை வென்றாய் போற்றி
ஓம் அயித மாயா வருவனே போற்றி
ஓம் அக்க குமாரனை வென்றாய் போற்றி
ஓம் அலங்கல் தாழ் மார்புடையவனே போற்றி
ஓம் அசோகவனம் அடைந்தாய் போற்றி
ஓம் அன்மையின் ஆசி பெற்றாய் போற்றி
ஓம் அமரர் கோனே போற்றி
ஓம் அத்திரத்தில் கட்டுண்டாய் போற்றி
ஓம் அஞ்சா நெஞ்சன் படைத்தோனே போற்றி
ஓம் அன்னை உயிர் காத்தவனே போற்றி
ஓம் அகத்தி தனக்கும் கதி கொடுத்தாய் போற்றி
ஓம் அணுவாய் நுழைந்தாய் போற்றி
ஓம் ஆண் தகை அனுமனே போற்றி
ஓம் ஆறுதல் கூறிய யவனே போற்றி
ஓம் ஆதவ சீடனே போற்றி
ஓம் ஆஞ்சநேயனே போற்றி
ஓம் ஆத்ம பலம் அருள்வாய் போற்றி
ஓம் இராவணைனோடு அமர் புரிந்தாய் போற்றி
ஓம் இலங்கினியை வென்றாய் போற்றி
ஓம் இதனிமாலை அணிந்தாய் போற்றி
ஓம் அசையுடை அண்ணலே போற்றி 
ஓம் இந்திரனின் ஆசி பெற்றால் போற்றி
ஓம் இராம தூதனே போற்றி
ஓம் இராம தாசனே போற்றி
ஓம் இளையவன் உயிர் காத்தாய் போற்றி
ஓம் இராம பாதமே போற்றி
ஓம் இராம பாதமே போற்றி
ஓம் இராம சேவையே போற்றி
ஓம் இராம நாமத்தை உச்சரிப்பவனே போற்றி
ஓம் இராகுவை ஆட்கொண்டவே போற்றி
ஓம் ஈங்கு எமக்கு அருள்வாய் போற்றி
ஓம் ஈடில்லா தெய்வமானாய் போற்றி
ஓம் உலகைக் காக்கும் உத்தமா போற்றி
ஓம் உண்மையான தொண்டனே போற்றி
ஓம் உதிக்கின்ற செங்கதிரே போற்றி
ஓம் உச்சித் திலகமே போற்றி
ஓம் கங்கையில் நடந்தாய் போற்றி
ஓம் கடல் கடந்து மாதியே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கம்பனைக் காத்த கவீந்திரன் போற்றி
ஓம் கவிக்கரவே போற்றி
ஓம் கண்ணுதலைப் போல் நகுகின்றாய் போற்றி
ஓம் கண்டவன் என உரைத்தாய் போற்றி
ஓம் கண்டதி நதியில் நீராடினாய் போற்றி 
ஓம் சாளக்கிராமம் கொணர்ந்தாய் போற்றி
ஓம் திரு ஆரைக்கால் வந்தாய் போற்றி
ஓம் திருமகளை கண்டாய் போற்றி
ஓம் கமலாயத்தில் கியாம் செய்தாய் போற்றி
ஓம் சாளக்கிராமத்தை பெயர்க்க முயன்றாய் போற்றி
ஓம் நரசிம்மனின் அசரீரி கேட்டாய் போற்றி
ஓம் நரசிம்மமூர்த்தியை தரித்தாய் போற்றி
ஓம் சாளக்கிராம மலையை வலம் வந்தாய் போற்றி
ஓம் அரங்கநாத சுவாமியை வணங்கினாய் போற்றி
ஓம் கணையாழி ஒப்புவித்தாய் போற்றி
ஓம் சூடாமணயை பெற்று வந்தாய் போற்றி
ஓம் பாழி நெடுந்தோள் வீரா போற்றி
ஓம் கடிகையில் அமர்ந்தாய் போற்றி
ஓம் அமிழ்தின் சுவையே போற்றி
ஓம் சுவையின் பயனே போற்றி
ஓம் ஐந்து முக அனுமனே போற்றி
ஓம் சிவந்த கண்களை உடையவனே போற்றி
ஓம் விரிந்த தாமரை முகத்தோனே போற்றி
ஓம் து£தனாய் இருந்து தொண்டனானாய் போற்றி
ஓம் மார்கழித் திங்களின் அவதரித்தாய் போற்றி
ஓம் மருத்துவ மலை எடுத்த வந்த மாருதியே போற்றி
ஓம் சொல்லின் செல்வா போற்றி
ஓம் சனியை ஆட்கொண்ட ராமதாசே போற்றி
ஓம் சமயத்தில் வந்து காப்பாய் போற்றி
ஓம் சஞ்சிதம் களையும் ரஞ்த முகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்த்திட வருவாய் போற்றி
ஓம் பகலவனைப் பழமெனப் பற்றினாய் போற்றி 
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வேண்டிய வரம் தருவாய் போற்றி
ஓம் தென்னிலங்கை சுட்ட இராமது£தா போற்றி
ஓம் நாமக்குன்றமெடுத்துவந்த அனுமனே போற்றி
ஓம் நாமகிரி அன்னையின் நற்சீடனே போற்றி
ஓம் நரசிம்ம சுவாமியை வணங்குபவனே போற்றி
ஓம் நான்மறையைப் பொருளே போற்றி
ஓம் நான்கு தேவங்களையும் கற்றுணர்ந்தாய் போற்றி 
ஓம் கிட்கிந்தையில் வாழ்ந்தவனே போற்றி
ஓம் சுக்கிரிவன் நல் அமைச்சனே போற்றி 
ஓம் ஐம் புலன்களையும் அடக்கியவனே போற்றி
ஓம் சுந்தர காண்ட நாயகனே போற்றி
ஓம் சீராளனே போற்றி
ஓம் மிக்க தாராளனே போற்றி
ஓம் தத்துவத்தை உணர்ந்தவனே போற்றி
ஓம் தத்துவத்திற்கும் தத்துவ மானவனே போற்றி
ஓம் நாமக்கல் நாதனே போற்றி
ஓம் சிரஞ்சீவி நீயே போற்றி
ஓம் சீதாராம பக்தனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்திருப்பவனே போற்றி
ஓம் கடமை வீரனே போற்றி
ஓம் அகிலமும் நீயே போற்றி
ஓம் என்றும் நிலைத்திருப்பவனே போற்றி
ஓம் சிறிய திருவடியே போற்றி
ஓம் உந்தன திருவடிளே போற்றி போற்றி 
ஓம் ஸ்ரீ சீதாராம திருவடிகளின் சேவையே போற்றி போற்றி

கிரக தோஷம் விலக அனுமன் மந்திரம்

கிரக தோஷம் விலக அனுமன் மந்திரம்

நம்மை பிடித்த கிரக தோஷங்கள் விலக கீழே கொடுக்கப்பட்டுள்ள அனுமனுக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூதம்
குமாரம் ப்ரும்ஹ சாரிணம்
துஷ்ட க்ரஹ வினாஸாய 
ஹனுமந்த முபாஸ் மஹே

ஒரே சுலோகத்தில் நவகிரஹ தியானம்

ஒரே சுலோகத்தில் நவகிரஹ தியானம்

கோவிலில் நவகிரஹ சன்னதியில் வழிபாடு செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.

ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர
சந்த்ரோ யசோ நிர்மலம்
பூதிம் பூமி ஸுதாம் சு தனய:
ப்ரக்ஜாம் குருர் கௌரவம்
கான்ய: கோமள வாக் விலாஸ மதுலம்
மந்தோமுத முததம் ஸர்வத:
ராஹுர் பாஹுபலம் விரோத சமனம்
கேது: குலஸ்யோன்னதிம் ஓம்

தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய கணபதி ஸ்லோகம்

தினமும் காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய கணபதி ஸ்லோகம்

தினமும் காலையில் எழுந்தவுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நலம் யாவும் கிடைக்கும்.

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் :

யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

விருப்பங்களை நிறைவேற்றும் பெருமாள் ஸ்லோகம்

விருப்பங்களை நிறைவேற்றும் பெருமாள் ஸ்லோகம்

விருப்பங்கள் நிறைவேற தினமும் அல்லது பெருமாளுக்கு உகந்த நாட்களில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை சொல்லி வரலாம்.

திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

- ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள் :

திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக் கொண்டவரே, வெங்கடேசா நமஸ்காரம். மங்களமான சரீரத்தை உடையவரே, ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே, அதே கரங்களில் சர்ப்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே, கோரிய அனைத்தையும் அருள்பவரே, வெங்கடேசா, நமஸ்காரம். என்னைக் கை கொடுத்துக் காத்தருள்வீராக.

தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு தரும் சரபேஸ்வரர் ஸ்லோகம்

Image result for sarabeswarar

தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் ராகு காலத்தில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.

ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய         
ஸ்ரீ சரபாஷ்டகம்  

- இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.

வறுமையை போக்கும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

வறுமையை போக்கும் ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

கடன், வறுமை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் குபேரன், மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா !
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ

என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

துன்பம் போக்கும் துர்க்கை அம்மன் 108 போற்றி

துன்பம் போக்கும் துர்க்கை அம்மன் 108 போற்றி

ராகுவிற்குரிய அதிதேவதை துர்க்கை. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் சர்வநலனும் உண்டாகும்.

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
ஓம் அபயம் தருபவளே போற்றி
ஓம் அசுரரை வென்றவளே போற்றி
ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி
ஓம் அருள்நிறை அன்னையே போற்றி
ஓம் அருளைப் பொழிபவளே போற்றி
ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி
ஓம் இணையில்லா நாயகியே போற்றி
ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈர மனத்தினளே போற்றி
ஓம் ஈடிணையற்றவளே போற்றி
ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி
ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி
ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி
ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி
ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி
ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி
ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி
ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி
ஓம் காளியே நீலியே போற்றி
ஓம் காபாலியை மணந்தவளே போற்றி
ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி
ஓம் கிரிராஜன் மகளே போற்றி
ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி
ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி
ஓம் குறுநகை கொண்டவளே போற்றி
ஓம் குங்கும நாயகியே போற்றி
ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி
ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி
ஓம் கோள்களை வென்றவளே போற்றி
ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி
ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி
ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி
ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி
ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி
ஓம் சங்கரன் துணைவியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி
ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி
ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி
ஓம் சியாமள நிறத்தாளே போற்றி
ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி
ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி
ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி
ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி
ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி
ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி
ஓம் தயாபரியே தாயே போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி
ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி
ஓம் நன்மை அருள்பவளே போற்றி
ஓம் நவசக்தி நாயகியே போற்றி
ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி
ஓம் நிமலையே விமலையே போற்றி
ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி
ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி
ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி
ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பயிரவியே தாயே போற்றி
ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி
ஓம் பயங்கரி சங்கரியே போற்றி
ஓம் பார்வதிதேவியே போற்றி
ஓம் புவனம் படைத்தவளே போற்றி
ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி
ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி
ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் மாதர் தலைவியே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி
ஓம் முக்தியளிப்பவளே போற்றி
ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி
ஓம் மூலப்பரம்பொருளே போற்றி
ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி
ஓம் யசோதை புத்திரியே போற்றி
ஓம் யமபயம் போக்குபவளே போற்றி
ஓம் ராகுகால துர்க்கையே போற்றி
ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி
ஓம் வல்லமை மிக்கவளே போற்றி
ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி
ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி
ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி
ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி 
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

தினமும் பாட வேண்டிய விஷ்ணு மந்திரம்

தினமும் பாட வேண்டிய விஷ்ணு மந்திரம்

விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம். மிக எளிய மந்திரத்தை இங்கு பார்க்கலாம்.

ஓம் விஷ்ணுவே நமஹ
ஓம் நமோ  பகவதே வாசுதேவாய
ஓம் நமோ நாராயணா
ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்.

விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன்படுத்துவர். தாமரை பூ தெய்வ மலர். வாசனையுள்ள மலர்களையே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

சக்தி தரும் காயத்ரி மந்திரம்

சக்தி தரும் காயத்ரி மந்திரம்

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

நல்லதை செய்யும் நவக்கிரக துதி

நல்லதை செய்யும் நவக்கிரக துதி

ஒவ்வொரு ஆலயத்திலும் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதிகள் இருக்கின்றன. அந்த சன்னிதியில் இருக்கும் நவக்கிரகங்களின் முன்பாக நின்று, அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்தால், ஒன்பது கிரகங்களும் மகிழ்ச்சி அடைந்து, துயரில்லாத வாழ்வையும், வளமான வாழ்வையும் வழங்கும். இங்கே ஒவ்வொரு நவக்கிரகத்திற்கும் உரிய காயத்ரி மந்திரங்களைப் பார்க்கலாம்.

சூரிய காயத்ரி :

‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி!
தன்னோ ஸுர்ய ப்ரசோதயாத்!’

சந்திரன் காயத்ரி :

‘பத்மத்வஜாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி
தன்னோ ஸோம ப்ரசோதயாத்!’

அங்காரன் காயத்ரி :

‘ஓம் வீர த்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தன்னோ பௌம ப்ரசோதயாத்’

புதன் காயத்ரி :

‘ஓம் கஜ த்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத ப்ரசோதயாத்’

குரு காயத்ரி :

‘ஓம் விருபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்!’

சுக்ரன் காயத்ரி :

‘ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
தநுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்’

சனீஸ்வர காயத்ரி :

‘ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்!’

ராகு காயத்ரி :

‘ஓம் நகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரசோதயாத்!’

கேது காயத்ரி :

‘ஓம் அச்வத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரசோதயாத்!’

விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

விநாயகருக்கு உகந்த 12 ஸ்லோகங்கள்

கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளை பெற உதவும் இந்த 12 ஸ்லோகங்களை பாடிப் பலன் அடையலாம்.

ஸ்லோகம் 1 :

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

ஸ்லோகம் 2 :

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 3 :

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 4 :

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்லோகம் 5 :

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்லோகம் 6 :

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.

ஸ்லோகம் 7  :

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

ஸ்லோகம் 8 :

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஸ்லோகம் 9 :

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

ஸ்லோகம் 10 :

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

ஸ்லோகம் 11 :

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

ஸ்லோகம் 12 :

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

பணக் கஷ்டத்தை போக்கும் மகாலட்சுமி ஸ்லோகங்கள்

பணக் கஷ்டத்தை போக்கும் மகாலட்சுமி ஸ்லோகங்கள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள மகாலட்சுமி மந்திரங்களை தினமும் ஒரு முறை சொல்லி வந்தால் வாழ்வில் எந்த ஒரு பணக் கஷ்டமும் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம்.

குபேரர் அவர்கள் அட்சய திரிதியை அன்று மகாலட்சுமி தேவியை நினைத்து துதித்தார். அதனால் மகாலட்சுமி தேவி அவருக்கு ஆசி வழங்கி, குறையாத செல்வம் நிலைக்க வரம் அளித்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரங்களை சொல்லி மகாலட்சுமி தேவியைத் துதித்து அவரின் ஆசியுடன் செல்வ வளத்தை பெறலாம்.

"ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரி 
ஸர்வ துர்க்க ஹரே தேவி 
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே" 

நான் மகாலட்சுமிக்கு தேவிக்கு வணக்கம் செலுத்துகிறேன். நீங்கள் அனைத்து வலி மற்றும் துயரங்களையும் அகற்றிடுவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

"ஸ்தூல ஸுக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி மஹோதரே 
மஹாபாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே" 

தாயே, நீங்கள் மிகப்பெரிய சக்தியாக உள்ளீர்கள், நீங்கள் மகிழ்ச்சிக்கும் செல்வத்துக்கும் பொறுப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் மிக பெரிய பாவங்களையும் அழித்துவிடவீர்கள். மகாலட்சுமி தாயே நான் உன்னை வணங்குகிறேன்.

"மஹாலக்ஷ்மியஷ்டகம் ஸ்தோத்ரம் யவ்படேத் பக்திமான் நரக 
ஸர்வ ஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா" 

இத்தகைய புனிதமான ஸ்தோத்திரத்தை முழு பக்தியுடனும் எப்போதும் எல்லா வகையான திறன்களையும் எல்லா வகையான ஞானத்தையும் தருகிறாய். மேலும், இதை துதிப்பவர்கள் அனைத்து ஆடம்பரமாக பொருட்களையும் சொந்தமாகக் கொண்டிருப்பார் மற்றும் உலக ஆசைகளை நிறைவேற்றுவார்.

Saturday, 16 December 2017

செல்வச்செழிப்பை அருளும் திருமால் 108 போற்றி

செல்வச்செழிப்பை அருளும் திருமால் 108 போற்றி

சனிக்கிழமைகளிலும், ஏகாதசி நன்னாளிலும் பெருமாள், கிருஷ்ணன் கோயில்களுக்கு செல்பவர்கள் இந்த போற்றியைப் பாடலாம். வீட்டில் திருவிளக்கேற்றியதும் இதைப்பாடி திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழலாம்.

1. ஓம் ஹரி ஹரி போற்றி
2. ஓம் ஸ்ரீஹரி போற்றி
3. ஓம் நர ஹரி போற்றி
4. ஓம் முர ஹரி போற்றி
5. ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி
6. ஓம் அம்புஜாஷா போற்றி
7. ஓம் அச்சுதா போற்றி
8. ஓம் உச்சிதா போற்றி
9. ஓம் பஞ்சாயுதா போற்றி
10. ஓம் பாண்டவர் தூதா போற்றி
11. ஓம் லட்சுமி சமேதா போற்றி
12. ஓம் லீலா விநோதா போற்றி
13. ஓம் கமல பாதா போற்றி
14. ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி
15. ஓம் அநாத ரக்ஷகா போற்றி
16. ஓம் அகிலாண்டகோடி போற்றி
17. ஓம் பரமானந்தா போற்றி
18. ஓம் முகுந்தா போற்றி
19. ஓம் வைகுந்தா போற்றி
20. ஓம் கோவிந்தா போற்றி
21. ஓம் பச்சை வண்ணா போற்றி
22. ஓம் கார்வண்ணா போற்றி
23. ஓம் பன்னகசயனா போற்றி
24. ஓம் கமலக்கண்ணா போற்றி
25. ஓம் ஜனார்த்தனா போற்றி
26. ஓம் கருடவாகனா போற்றி
27. ஓம் ராட்சஷ மர்த்தனா போற்றி
28. ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
29. ஓம் சேஷசயனா போற்றி
30. ஓம் நாராயணா போற்றி
31. ஓம் பிரம்ம பாராயணா போற்றி
32. ஓம் வாமனா போற்றி
33. ஓம் நந்த நந்தனா போற்றி
34. ஓம் மதுசூதனா போற்றி
35. ஓம் பரிபூரணா போற்றி
36. ஓம் சர்வ காரணா போற்றி
37. ஓம் வெங்கட ரமணா போற்றி
38. ஓம் சங்கட ஹரனா போற்றி
39. ஓம் ஸ்ரீதரா போற்றி
40. ஓம் துளசிதரா போற்றி
41. ஓம் தாமோதரா போற்றி
42. ஓம் பீதாம்பரா போற்றி
43. ஓம் பலபத்ரா போற்றி
44. ஓம் பரமதயா பரா போற்றி
45. ஓம் சீதா மனோகரா போற்றி
46. ஓம் மச்ச கூர்ம அவதாரா போற்றி
47. ஓம் பரமேஸ்வரா போற்றி
48. ஓம் சங்கு சக்கரா போற்றி
49. ஓம் சர்வேஸ்வரா போற்றி
50. ஓம் கருணாகரா போற்றி
51. ஓம் ராதா மனோகரா போற்றி
52. ஓம் ஸ்ரீரங்கா போற்றி
53. ஓம் ஹரிரங்கா போற்றி
54. ஓம் பாண்டுரங்கா போற்றி
55. ஓம் லோகநாயகா போற்றி
56. ஓம் பத்மநாபா போற்றி
57. ஓம் திவ்ய சொரூபா போற்றி
58. ஓம் புண்ய புருஷா போற்றி
59. ஓம் புரு÷ஷாத்தமா போற்றி
60. ஓம் ஸ்ரீ ராமா போற்றி
61. ஓம் ஹரிராமா போற்றி
62. ஓம் பலராமா போற்றி
63. ஓம் பரந்தாமா போற்றி
64. ஓம் நரஸிம்ஹா போற்றி
65. ஓம் திரிவிக்ரமா போற்றி
66. ஓம் பரசுராமா போற்றி
67. ஓம் சகஸ்ரநாமா போற்றி
68. ஓம் பக்தவத்சலா போற்றி
69. ஓம் பரமதயாளா போற்றி
70. ஓம் தேவானுகூலா போற்றி
71. ஓம் ஆதிமூலா போற்றி
72. ஓம் ஸ்ரீ லோலா போற்றி
73. ஓம் வேணுகோபாலா போற்றி
74. ஓம் மாதவா போற்றி
75. ஓம் யாதவா போற்றி
76. ஓம் ராகவா போற்றி
77. ஓம் கேசவா போற்றி
78. ஓம் வாசுதேவா போற்றி
79. ஓம் தேவதேவா போற்றி
80. ஓம் ஆதிதேவா போற்றி
81. ஓம் ஆபத் பாந்தவா போற்றி
82. ஓம் மகானுபாவா போற்றி
83. ஓம் வசுதேவ தனயா போற்றி
84. ஓம் தசரத தனயா போற்றி
85. ஓம் மாயாவிலாசா போற்றி
86. ஓம் வைகுண்டவாசா போற்றி
87. ஓம் சுயம்பிரகாசா போற்றி
88. ஓம் வெங்கடேசா போற்றி
89. ஓம் ஹ்ருஷி கேசா போற்றி
90. ஓம் சித்தி விலாசா போற்றி
91. ஓம் கஜபதி போற்றி
92. ஓம் ரகுபதி போற்றி
93. ஓம் சீதாபதி போற்றி
94. ஓம் வெங்கடாசலபதி போற்றி
95. ஓம் ஆயாமாயா போற்றி
96. ஓம் வெண்ணெயுண்ட நேயா போற்றி
97. ஓம் அண்டர்களேத்தும் தூயா போற்றி
98. ஓம் உலகமுண்டவாயா போற்றி
99. ஓம் நானாஉபாயா போற்றி
100. ஓம் பக்தர்கள் சகாயா போற்றி
101. ஓம் சதுர்புஜா போற்றி
102. ஓம் கருடத்துவஜா போற்றி
103. ஓம் கோதண்டஹஸ்தா போற்றி
104. ஓம் புண்டரீகவரதா போற்றி
105. ஓம் விஷ்ணு போற்றி
106. ஓம் பகவானே போற்றி
107. ஓம் பரமதயாளா போற்றி
108. ஓம் நமோ நாராயணா போற்றி! போற்றி!! 

வெற்றி தரும் அம்பாள் துதிப்பாடல்

வெற்றி தரும் அம்பாள் துதிப்பாடல்

கீழ்க்காணும் மந்திரத்தைத் தினமும் 16 முறை கூறி வழிபட்டு வந்தால், வாழ்வில் வெற்றிகளே தொடரும்.

இல்லாமை என்னுமொரு பொல்லாத பாவியால்
    எந்நேரமும் இடருறாமல்
ஏற்காமல் ஏற்பவர்க் கில்லையென் றுரையாமல்
    இழிதொழில்கள் செய்திடாமல்
கல்லாத புல்லர்உற வில்லாமல் கடுபிணி
    கனாவிலும் எனைத் தொடாமல்
கற்றப் பெரியோர்களோடு தர்க்கித்தெதிர்த்துக்
    கடிந்தசொற் சொல்லிடாமல்
வெல்லாமை வென்றவன் இடத்தில்வளர் அமுதமே
    விரிபொழில் திருமயிலைவாழ்
விரைமலர்க் குழல்வள்ளி மறைமலர்ப் பதவல்லி
    விமலிகற் பகவல்லியே!

ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்

Image result for bhairava god

கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை பைரவர் காயத்ரி மந்திரங்கள். அதில் சிலவற்றை பார்க்கலாம்.

இத்தகைய ஸ்தோத்திரங்களினால் நம் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து நன்மை விளையும் என்பது ஐதீகம். கொடிய வல்வினைகளையும் நொடியில் போக்கும் தன்மை கொண்டவை பைரவர் காயத்ரி மந்திரங்கள். 

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !! 

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத் 

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்யும் தன்மை மிக்க ஸ்ரீ பைரவரை முறைப்படித் தொழுது வணங்க நம் தீரா வினைகள் அனைத்தும் தீரும்.

செல்வம் அருளும் மகாலட்சுமி ஸ்லோகம்

Image result for mahalakshmi god

வறுமை, பண கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை 
பத்மாயை ஸததம் நமஹ
நமோ விஷ்ணு விலாஸின்யை
பத்மத்ஸாயை நமோ நமஹ
மகாலட்சுமி துதி

பொதுப் பொருள்: மகாலட்சுமிக்கு நமஸ்காரம். மகாதேவியும், எப்போதும் தாமரையில் வீற்றிருப்பவளுமான உனக்கு நமஸ்காரம். விஷ்ணுவின் மனதில் அமர்பவளும், தாமரையில் பிரியம் கொண்டவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம். 

செல்வம் அருளும் திருவிளக்கு ஸ்தோத்திரம்

செல்வம் அருளும் திருவிளக்கு ஸ்தோத்திரம்

கடன், பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் சிவாய நம
ஓம் சிவசக்தியே நம
ஓம் இச்சா சக்தியே நம
ஓம் கிரியாசக்தியே நம
ஓம் சொர்ண சொரூபியே நம
ஓம் ஜோதி லக்ஷமியே நம
ஓம் தீப லக்ஷமியே நம
ஓம் மஹா லக்ஷமியே நம
ஓம் தனலக்ஷமியே நம
ஓம் தான்யலக்ஷமியே நம
ஓம் தைர்யலக்ஷமியே நம
ஓம் வீரலக்ஷமியே நம
ஓம் விஜயலக்ஷமியே நம
ஓம் வித்யா லக்ஷமியே நம
ஓம் ஜெய லக்ஷமியே நம
ஓம் வரலக்ஷமியே நம
ஓம் கஜலக்ஷமியே நம
ஓம் காம வல்லியே நம
ஓம் காமாட்சி சுந்தரியே நம
ஓம் சுபலக்ஷமியே நம
ஓம் ராஜலக்ஷமியே நம
ஓம் கிருஹலக்ஷமியே நம
ஓம் சித்த லக்ஷமியே நம
ஓம் சீதா லக்ஷமியே நம
ஓம் திரிபுரலக்ஷமியே நம
ஓம் சர்வமங்கள காரணியே நம
ஓம் சர்வ துக்க நிவாரணியே நம
ஓம் சர்வாங்க சுந்தரியே நம
ஓம் சௌபாக்ய லக்ஷமியே நம
ஓம் நவக்கிரஹ தாயினே நம
ஓம் அண்டர் நாயகியே நம
ஓம் அலங்கார நாயகியே நம
ஓம் ஆனந்த சொரூபியே நம
ஓம் அகிலாண்ட நாயகியே நம
ஓம் பிரம்மாண்ட நாயகியே நம

சூரிய நமஸ்கார மந்திரம்

சூரிய நமஸ்கார மந்திரம்

சூரிய (பூஜை) நமஸ்காரம் என்பது மற்ற தெய்வங்களை பூஜை அறையில் வழிபடுவது போல சூரியனையும் வழிபடுவதையேக் குறிக்கும். இது யார் வேண்டுமானாலும் எளிய முறையில் செய்யலாம். 

அதிகாலையில், அதாவது ஆறு மணிக்குள் எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து சமயச் சின்னங்களை (விபூதி, குங்குமம், திருமண் போன்றவை) அணிந்து கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை தரிசனம் செய்வது சூரிய நமஸ்காரத்தின் முதல்படி.

ஓம் மித்ராய நம:
ஓம் ரவயே நம:
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:

சகல சௌபாக்கியங்களும் கிட்ட...


ஹ்ரீம் க்லீம் இந்த்ராணி ஸௌபாக்ய தேவதே 
மகவத்ப்ரியே ஸௌபாக்யம் தேஹி மே ஸ்வாஹா:
இந்த்ராணீ மந்த்ரம்.

பொதுப் பொருள்: 

ஹ்ரீம் க்லீம் எனும் பீஜங்களில் உறையும் இந்திரனின் பத்தினியான இந்திராணியே நமஸ்காரம். சகல சௌபாக்கியங்களுக்கும் அதி தேவதையே, பக்தர்களிடம் பிரியம் கொண்டவளே, நமஸ்காரம். எனக்கு எல்லா வளங்களையும், நலன்களையும் எப்போதும் அருள வேண்டும் தாயே, நமஸ்காரம்.

பாவங்கள், ரோகங்கள் நீங்க, மனக்கவலை அகல...

Image result for shiva god

பாபம் தாபம் வ்யாமி மாதிம் ச தைர்யம்
பீதிம் க்லேசம் த்வம் ஹராஸு த்வதன்யம்
த்ராதாரம் நோ வீக்ஷ ஈசாஸ்த ஜனார்த்தே
கோராத் கஷ்டாதுத்தராஸ்மாந் நமஸ்தே.
குரு தத்தாத்ரேய பஞ்சரத்னம் 

பொதுப் பொருள்: 

பாவத்தையும், தாபத்தையும், ரோகங்களையும் மனக்கவலையையும், ஏழ்மையையும், சத்ரு பயத்தையும் துக்கத்தையும் ஓ தத்தாத்ரேயரே! தாங்கள் நீக்கியருள வேண்டும்.

செய்யும் தொழிலில் ஊக்கம் கிட்ட, லாபம் அதிகரிக்க...

Image result for kali god

கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:
சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்
யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ
நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்
தேவி மஹாத்மியம் மகாகாளி த்யானம் 

பொதுப் பொருள்: 

தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்.

அனுமனின் திருவருள் கிட்ட...

Image result for anuman

அயோத்யாநகர ரம்யே ரத்ன ஸௌந்தர்ய மண்டபே
மந்தாரபுஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
ஸிம்ஹாஸந ஸமாரூடம் புஷ்பகோபரி ராகவம்
ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதை:ஸுபை:
ஸம்ஸ்தூயமாநம் முநிபி: ஸர்வத: பரிஸேவிதம்
ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோபஸோபிதம்
ஸ்யாமம் ப்ரஸந்நவதநம் ஸர்வாபரண பூஷிதம்

பொதுப்பொருள்: 

அயோத்தி நகரத்தில் ரம்யமான ரத்ன ஸௌந்தர்ய மண்டபத்தில் மந்தாரம்போன்ற பலவிதமான புஷ்பங்களால் ஆக்கப்பட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் சீதா, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனோடு மேகவண்ணத்துடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் சர்வாலங்காரத்துடன் காட்சி தரும் ராமபிரானை வணங்குகிறேன். 

Monday, 25 September 2017

கடன் தீர்ந்து வளங்கள் பெருக



த்வயா ஹ்ருத்வா வாமம் வபு ரபரித்ருப்தேன மனஸா
சரீரார்த்தம் சம்போ ரபரமபி சங்கே ஹ்ருதமபூத்
யதேதத் தவத்ரூபம் ஸகல மருணாபம் த்ரிநயனம்
குசாப்யா மாரம்ரம் குடில சசி சூடால மகுடம்
ஆதிசங்கரரின் ஸௌந்தர்யலஹரி

பொதுப் பொருள்: 

பிரிக்கவொண்ணாத சிவமும் சக்தியுமான அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபியே நமஸ்காரம். சிவன் வெள்ளை நிறத்துடனும், சக்தி சிவப்பு நிறத்துடனும் ஒன்றியிருக்கிறார்கள். ஆனால் இதில், தேவியின் உருவம் முற்றிலும் சிவப்பு நிறமாகவே காணப்படுகிறது. அதோடு, அவள் முக்கண்களைக் கொண்டவளாகவும், தன்னுடைய கிரீடத்தில் சந்திரப் பிரபையை உடையவளாகவும், காட்சி தருவது, சிவமே முழுவதுமாக சக்தியாகிவிட்டதோ என்றே கருத வைக்கிறது. இத்தகைய மகிமை வாய்ந்த சக்தியே நமஸ்காரம்.

(இத்துதியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஜபித்து வந்தால் வாழ்வில் சகல வளங்களும் பெற்று  கடன் தொல்லைகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.)

குற்றங்கள் மன்னிக்கப்பட


மனோவ்ருந்திரஸ்து ஸம்ருதிஸ்தே ஸமஸ்தா
ததா வாக்ப்ரவ்ருத்தி ஸ்துதி: ஸ்யான் மஹேசி
சரீரப்ரவ்ருத்தி: ப்ரணாம் க்ரியா ஸ்யாத்
ப்ரஸீத க்ஷமஸ்வ ப்ரபோ ஸந்ததம் மே!
ஆதிசங்கரர் அருளிய புவனேஸ்வரி துதி 

பொதுப் பொருள்: 

அம்மா! நான் நினைக்கும் விஷயங்கள் எல்லாம் உன்னை நினைப்பதாகவே ஆகட்டும். என் வாக்கிலிருந்து எழும் சொற்கள் யாவும் தங்களைக் குறித்துச் செய்யும் துதியாகவே இருக்கட்டும். என் சரீரத்தால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் தங்களுக்குச் செய்யப்படும் நமஸ்காரம் ஆகட்டும். தாயே திருவருள் புரிய வேண்டும். எப்போதும் நான் செய்யும் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டும். 

(இத்துதியை தினமும் இரவில் படுக்கப்போகும் முன் பாராயணம் செய்தால் நாம் அன்றன்று அறியாமல் செய்த குற்றங்கள் மன்னிக்கப்படும்.)

ஆபத்துகள் அகல


பானுகோடி பாஸ்வரம் பவாப்பதிதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷமக்ஷசூல மக்ஷரம்
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே.
காலபைரவாஷ்டகம்

பொதுப் பொருள்:  

கோடி சூர்யப் பிரகாசம் பொருந்தியவரும், பிறவிக் கடலைக் கடத்துவிப்பவரும், பரம்பொருளும், கழுத்துப் பகுதியை கருமை நிறமாய் கொண்டவரும், வேண்டுவோர் வேண்டியதை அளிப்பவரும், முக்கண்ணரும், யமனுக்கு யமன் போன்றவரும், தாமரைக் கண்ணரும், சூலபாணியும், அழிவற்றவரும் காசிகாபுரியின் ஆதிநாதருமான காலபைரவரைப் பணிகிறேன். 

(இத்துதியை ஆபத்துக் காலங்களில் பாராயணம் செய்தால் ஆபத்துகள் அகலும்.)

குறைவற்ற செல்வம் பெற


ஓம் கம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய மோதகஹஸ்தாய 
நாலிகேரப்ரியாய ஸர்வாபீஷ்டப்ரதாயிநே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் 
ஸர்வஜனம்மே வஸமாநய ஸ்வாஹா. 
கணேச கல்பம் 

பொதுப் பொருள்: 

கம் எனும் பீஜத்திற்கு உரிய மகாகணபதியே! ஒரு தந்தத்தைக் கொண்டவரே! ஹேரம்பன் எனும் பெயர் பெற்றவரே! திருக்கரத்தில் மோதகத்தை ஏந்தியுள்ளவரே! தேங்காயை உண்பதில் பிரியமுள்ளவரே! பக்தர்களின் சகல விருப்பங்களையும் நிறைவேற்றுபவரே! ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் எனும் லக்ஷ்மி பீஜம், புவனேஸ்வரி பீஜம், மன்மத பீஜாட்சரங்களை தன் மூல மந்திரத்தில் வைத்துள்ளவரே! அனைவரும் எனக்கு வசமாகும்படிச் செய்வீராக. எனக்கு குறைவற்ற செல்வ வளங்களைத் தந்தருள்வீர். 

(நான்காம் பிறைச் சந்திரனை பார்த்ததால் கிருஷ்ணருக்கு ஜாம்பவானிடமிருந்து சியமந்தகமணியை திருடினார் என்ற அபவாதம் எழுந்தது. அதை நீக்க கிருஷ்ணர் கடைபிடித்த விரதமே சங்கடஹர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து நிலவை தரிசித்த பின் இரவு உணவை முடித்து விநாயகப் பெருமானை ஆராதித்தால் குறைவற்ற செல்வம் பெறலாம். தடைகள் தவிடுபொடியாகும்.)

விஷக் காய்ச்சல் விலக


கிரந்தீ மங்கேப்ய: கிரணநிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகரசிலாமூர்த்தி மிவ ய:
ஸ: ஸர்ப்பாணாம் தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா: ஸுகயதி ஸுதாதார ஸிரயா ஆதி சங்கரரின் ஸெளந்தர்யலஹரி 

பொதுப் பொருள்: அம்பிகையே நமஸ்காரம்.

என் ஐம்புலன்களாலும் பக்தி ரசத்தைப் பெருக்கும் வகையில் உன்னை வணங்குகிறேன். சந்திரகாந்தச் சிலை வடிவினளாக உன்னை உருவகித்து தியானிக்கிறேன். எனக்கு, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை அடக்கும் கருடன் போன்ற ஆற்றலினை அருள்வாயாக. அம்மா, உன் பார்வை, விஷ ஜந்துகளால் ஏற்படும் உபாதைகளையும், விஷக் காய்ச்சலையும் அறவே ஒழிக்கிறது. பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷம் தன்னைத் தாக்கக்கூடாது என்பதற்காக மஹாவிஷ்ணுவே அம்ருதேஸ்வரியான அம்பிகையை தியானித்திருக்கிறார் என்றால், உன் அருள்தான் எத்தகைய நன்மை விளைவிக்கக் கூடியது! 

(இந்தத் துதியை பஞ்சமி திதிநாள் அன்று நோயுற்றோர், விஷ உபாதையால் அவதியுறுவோர் முன் 16 முறை ஜபித்து அவர்களுக்கு விபூதி இட்டு அம்பிகையை உளமாற வணங்கினால் பாதிப்புகள் விலகும்)

திருமகளின் திருவருள் நிலைத்திட


ஸ்திராபவ மஹாலக்ஷ்மி
நிச்சலா பவ நிர்மலே
ப்ரஸன்ன கமலே தேவி
ப்ரஸன்ன ஹ்ருதயா பவ!
லட்சுமி கல்பம்

பொதுப் பொருள்: 

தாயே, திருமகளே, எங்கள் வீட்டில் நீ நிரந்தரமாக வசித்திட வேண்டும். எங்கள் உள்ளம் உவகையால் பூரிக்க, சஞ்சலமற்ற சந்தோஷத்துடன் வசிக்க வேண்டும். தாமரையில் வீற்றிருக்கும் கமலா தேவியே, எங்களுக்குத் தெளிவான சிந்தனையை அளித்து, எங்களுடன் நிரந்தரமாக எங்கள் இல்லத்தில் வீற்றிருந்து அருள் புரிவாயாக.

உன்னதப் பதவியும் அதிகாரமும் பெற



த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா. ஸௌந்தர்ய லஹரி 

பொதுப் பொருள்: 

சிவ பத்தினியான அன்னையே, நமஸ்காரம். உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் பூஜைகள் எல்லாம் மும்மூர்த்திகளுக்கும்  உரிய பூஜையாகும். ஏனென்றால் அந்த மும்மூர்த்திகளும் உங்களுடைய முக்குணங்களை அனுசரித்துத் தோன்றியவர்களே. இவ்வாறு மும்மூர்த்திகளுக்குமான பூஜைக்குரியவளே, நமஸ்காரம். அவர்கள் மூவரும் உங்களுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகைக்கு அருகே தத்தமது கிரீடங்களுக்கு மேலாகத் தம் கரங்களைக் குவித்து எப்போதும் வழிபடும் வகையில் சிறப்பு பெற்றவளே, நமஸ்காரம்.

(ஆதிசங்கரர் அருளிய இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அதிகாரத்தோடு கூடிய உயர்ந்த பதவி கிடைக்கும்.)

வாழ்வு வளம் பெற



வல்லீ வதன ராஜீவ மதுபாய மஹாத்மனே
உல்லஸன்மனி கோடீர பாஸுராயாஸ்து மங்களம்
கந்தர்ப்ப கோடி லாவண்ய நிதயே காமதாயினே
குலிசாயுத ஹஸ்தாய குமாராயாஸ்து மங்களம்
ஸ்கந்த பூஜா கல்பம்

பொதுப் பொருள்: 

வள்ளியின் முகமாகிற தாமரையில் தேன்வண்டுபோல் இருப்பவரும், ஒளி வீசுகின்ற மணிமயமான கிரீடம் சூடி பிரகாசிக்கின்றவருமான முருகனுக்கு நமஸ்காரம். கோடி மன்மதனுடைய அழகைத் தன்னகத்தே கொண்டவரும், பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியதை அளிப்பவரும், குலிசாயுதத்தை கையில் தரித்திருப்பவருமான கந்தனே, நமஸ்காரம்.

எல்லா செயல்களிலும் வெற்றி பெற


ஓம் நமோ கணபதயே நமஹ
கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:
த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:
விநாயகஸ்சாருகர்ண: பஸுபாலோ பவாத்மஜ:
பத்ம புராணத்தில் உள்ள விநாயகர் துதி

பொதுப் பொருள்: 

‘ஓம்’ எனும் மூலமந்திரத்திற்கு அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத கணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரே, இடையூறுகளை இல்லாது செய்பவரே, அழகான நீண்டதுதிக்கையை உடையவரே, யானையின் முகம் படைத்தவரே, கங்கா, கௌரி என இரண்டு தாய்களைக் கொண்டவரே, பக்தர்களுக்குக் குறைவில்லாது அருள்புரிபவரே, ஒரு தந்தத்தைக் கொண்டு அருள் புரிபவரே, அழகிய பெரிய காதுகளைக் கொண்டவரே, உலக மக்களைக் காப்பவரே, பரமனின் புத்திரனே, உமக்கு நமஸ்காரம். எங்கள் விக்கினங்களையெல்லாம் விலக்கி நிம்மதிப்பெருவாழ்வு வாழ, வழி நடத்துவீராக.

(விநாயகரைத் தொழ நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. எப்போதும் அவரை நினைத்து வணங்கலாம். நம் செயல்களில் ஏற்படும் இடையூறுகளை அகற்றி வெற்றிபெறச் செய்பவர் அவர். அறுகம்புல்லால் இத்துதியைக்கூறி அவரை அர்ச்சித்தால் எல்லா வளமும், காரிய வெற்றியும் பெறலாம்.)